ஓர் இதயத்தின் ஓசை

பகலுக்கு துணையாக நிலவும் வேண்டாம்
இரவுக்கு துணையாக அந்த கதிரவன் வேண்டாம்
எனக்கு துணையாக நீயும் வேண்டாம்
இருந்தபோதும் துணைவியாக வரவும் நீயோ மறுக்க வேண்டாம்

எழுதிய எழுதுகோலும் எந்தன் எண்ணங்கள் சொல்லும்
வடிகின்ற கண்ணீரும் எந்தன் வலிகளை சொல்லும்
என் தனிமையின் நொடிகளும் உந்தன் நினைவுகள் சொல்லும்
அடி இத்தனை நான் சொல்லியும் உன் காதல் மட்டும் சொல்லாதது ஏனடி?

கடலுக்குள் மீனாக நானும் நீந்தினேன்
கரையேற முடியாமல் தினமும் தவிக்கிறேன்
பொழுதுகள் யாவும் மறக்கிறேன்
நித்தமும் உந்தன் முகம் நினைக்கிறேன்

வானை விட்டு விலகாத எந்தன் முழுமதியே
கடலை விட்டு நீங்காதே எந்தன் கரையை
உடலை விட்டு பிரியாதே எந்தன் உயிரே
மனதையும் உடைத்து செல்லாதே எந்தன் மலரே!

சிறு குழவியாக உன்னை நானும் ரசித்ததும் தவறோ?
நீ விளையாட எந்தன் உணர்வுகளும் கேட்பதும் முறையோ?
கொட்டும் மழையை மறந்து நனைந்தேனோ??
என் கண்ணீர் துளிகளையும் அதில் நான் மறைப்பேனோ??

என் மரமே உன் வேரை மண்ணில் புதைக்காதே
என் மலரே உன் மனதை நீயும் பூட்டி மறைக்காதே
உன் மனதை திறந்து என்னை நீயும் அழைப்பாயோ??
என் மனதையும் சொல்ல ஒரு வாய்ப்பை நீயும் தருவாயோ?..

Comments

Post a Comment

Popular Posts