தாய்மை
ஆடம்பர வீட்டில் வாழ்வதும் சுகமோ?
அவள் ஆடையில் கட்டிய தொட்டில் போல வருமா?
என் குரலும் குணமும் அறியும் முன்னே
என்னை நேசித்த நெஞ்சமும் நீயே!
தன் குழந்தையின் அழுகையின் அர்த்தங்களை
அறிந்த அகராதியும் அவளே!
தன் தேவைகளை அவள் என்றும் எண்ணியதும் இல்லை
என் தேவைகளை அவள் மறந்ததும் இல்லை
உன்னை போன்று ஓர் உறவுமில்லை
அறியும் வேளை நீ என்னோடும் இல்லை!
தாலாட்ட உறவுகள் பல இங்கேயுண்டு
என் மனம் சொல்ல உன் மடியுமில்லை!
விரல் பிடித்து நடந்திட உன் விரல்களும் எனக்கில்லை
நிழல்போல உன்னை தொடர நிஜத்தோடு இங்கே நீயுமில்லை..!
Haii bro this is dary.... Innila irunthu na ungaloda fan agiten rombha anubhvichu ezhuthuringa ovoru words um semma touching ah summa sollala rombha rombha pudichirukku.... Hatsoff you bro
ReplyDeleteBy
Dary
Thnks ma
DeleteHeart Touching💙
ReplyDelete