குடைக்குள் மழை


மேகங்கள் இருள் சூழ
மின்னல்கள் படம் பிடிக்க
நீயும் நானும் குடையாக
நம் வாழ்வில் மழைக்காலமோ!

கண்ணோடு கண் பேசிட
வார்த்தைகளும் தடுமாற
உன்னோடு நான் பேச
புது மொழியும் இங்கு தேடனுமே!

ஆதாமும் ஏவாளும் ஆதியில் பேசாத வார்த்தைகள்
உன்னோடு தினம் இரவில் நான் பேசிட வேண்டும்
மலரோடு வண்டாக உடலோடு உயிராக
உன்னோடு நானாக என்னோடு நீயாக பிரியாமல் நாம் வாழ்ந்திட வேண்டும்

தூரங்கள் அறியாத பறவைகள் போல் நாமும்
நெடுந்தூரம் உன்னோடு கைக்கோர்த்து சிறகடித்திட வேண்டும்
என் மனதினுள்ளே தன்னாலே
மழைப்பொழிது உன்னாலே
அதை உன் இரு இதழ் கொண்டு நீ துடைத்திட வேண்டும்!!!

Comments

Post a Comment

Popular Posts