தந்தையின் பிரிவு

அப்பா.....!!

கருவறை வரையில் தாயின் நேசம்
கல்லறை வரையில் உந்தன் தியாகம்!

கண்ணில் கனலை என்னோடு காட்டினாய்
இதயத்திலுள்ள அந்த ஈரத்தை மட்டும் ஏனோ உன்னோடு பூட்டினாய்!

நீ படும் துன்பங்களை உன்னோடு மறைத்து
இன்பங்களை மட்டும் தந்த இறைவனும் நீதான்!

உன்னைவிட உயர விண்ணோடு என்னை உயர்த்தி தோளில் சுமந்தவனும்  நீதான்!

கருவறையும் அன்றி என்னையும் சுமந்தாய்
இன்று கல்லறையில் நீ மட்டும் ஏன் சென்று உறைந்தாய்??

என் விழிகளும் இங்கே உன்னையும் காண
விடியும் பொழுதில் நீ என்னோடு இல்லை!

வழிகள் யாவும் வாழ்வில் மறைந்து போக
வழி நடத்தி செல்ல வழிகாட்டி நீயுமில்லை!

அன்று நான் உறக்கமும் கொள்ள என்னை மார்போடு அணைத்தாய்
இன்று ஒளிராமல்  நீ ஏன் அணைந்தாய்??

நான் அறியாத துன்பங்கள் யாவும் நீ  என் அருகில் இல்லாமல் அறிந்தேன்!

உறவுகளின் வேஷம் சில உள்ளங்களின் மோசம்
உந்தன் பிரிவுதனில் உணர்ந்தேன்!

மண்ணோடு நீ மறைந்தே போனாலும்
மறக்காத அன்பை என்னோடு தந்தே போனாய் !!!

நடிக்க தெரிந்த நடிகர்கள் பலர் இருந்தாலும் நம்மிடையே நடிக்க தெரியாத ஓரே ஒரு உண்மையான நிஜ ஹுரோவான அப்பாக்களுக்கு இக்கவி சமர்பணம்🙏🙏

Comments

Post a Comment

Popular Posts