மங்கையும் மாலைப்பொழுதும்

உலகம் கடந்து  உறவுகள்  மறந்து  இருயிர்கள் வாழ ஒரு தேசமே
மழை  தூவ , மண் வாசம்  வீச  இரு மனங்கள் அங்கே பேசுதே

இருள் சூழும் கார்ப்பொழுதும் இங்கே எந்தன் காரிகையும்
ஒரு கையில் தேநீரும் மறு கையில் அவள் கன்னங்களும்

துளி சிந்தும் மழை அழகில் தேன் சிந்தும் அவள் அழகை
ஒருசேர நான் ரசித்தே வாழ்வின் பொழுதை கழிப்பேன்…

தடைகளும் உடைகிறதே வெட்கங்களும் விலகியதே
என் அருகே நீ வரவே புது மௌனங்களும் இங்கே மலர்கிறதே

இரவுகள் உறங்கி யும் உறங்காமல் உந்தன் அணைப்பில் நான் வேண்டும்
விடிய வரும் பொழுதும் விடியாமல் தினம்  நீண்டிட வேண்டும்!

Comments

Post a Comment

Popular Posts