பெண்ணியம்

உயிர் வலி பெற்று ஓர் உயிரையும் பெறுவாள்
உறவுகளுக்காக தன் உரிமைகளையும் இழப்பாள்

காப்பியங்கள் பலவும் பெண்ணைமையை போற்றும்
கடல் சேரும் ஆறுகள் யாவும் பெண் பெயரையே சாரும்

மண்ணுக்கும் நோகாமல் அவள் நடையும் போடுவாள்
சிறு மலருக்கும் வலிக்காமல் வாசமும் நுகர்வாள்

உலகின் உயிர்கள் யாவும் அவளுக்கு உறவுகளே
அடுப்படியில் வெந்தாலும் அவளது கைகள் சிறகுகளே

மென்மையின் உருவமானால் இந்த பெண்மையே
கோபத்தின் தாகத்தை துளி கண்ணீரில் காட்டுவதும் அவள் தன்மையே

கள்ளிக்கு இறையான காலங்களும் கடந்தது
கடல் கடந்து வெல்லும் காலமும் இன்று வந்தது

எவருக்கும் அடிமை இல்லை பெண்களே
அகிலமும் அடிமையே அன்னைக்கே!

Comments

Post a Comment

Popular Posts