மௌனம் பேசியதே

கடலாக படர்ந்தேன் நான்
கரையேற துடித்தேன் நான்
நிழலாக தொடர்ந்தேன் நான்
நினைவாகி கலைந்தாய் நீ…

தனிமையில் வாடும் நிலவின் தாகம் பகல் வரை எவரும் அறிவதுமில்லை
மழையில் நின்று அழுதால் கூட சில மனங்களின் கண்ணீர் தெரிவதுமில்லை
வழியில் வந்த உறவுகள் யாவும் இங்கே நிலைப்பதுமில்லை
என் வலிகளின் வரிகள் அறிந்திட ஏனோ வழியுமில்லை

கடற்கரையின் சுவடுகளா? எந்தன் காதலும் கரைந்து போக
காலை நேர கனவுகளா? துயில் கலைந்ததும் தொலைந்து போக
பயண வேளை காட்சிகளா?
நொடிகளில் மறந்து போக
கண்ணை விட்டு இமை நீங்கிடுமா? என் காதலும் உன்மேல் குறைந்திடுமா?...

உன்மேல் கொண்ட காதல் இங்கே கவிதைகளாயின
அந்த கவிதைகள் யாவும் என் மனதில் மடிந்து மௌனங்களாயின..

Comments

Post a Comment

Popular Posts