தூத்துக்குடியின் துயரம்



முத்தெடுக்க மூழ்கிய எங்கள் ஊரோ சோகத்தில் மூழ்கின
கடல் நீந்திய எங்கள் உறவோ கண்ணீரில் நீந்தின
எங்கள் துறைமுகங்கள் கூட துக்கங்கள் பூண்டன
உங்கள் நீதித்துறைகள் யாவும் தன் கதவுகளை பூட்டின!!

தேர்வுத்துறையின் முடிவை எதிர்பார்த்த அந்த இளம் புறா

காவல்துறையின் வெறியாட்டத்தை ஏனோ எதிர்பாக்கவில்லை
தேர்வின் முடிவில் அவளும் வென்றாள்
தேகத்தில் அவளோ தோட்டாக்களை சுமந்தாள்!!

அங்கே திட்டமிட்டு காவல்கள் சுட்டன
சுடப்பட்ட உடல்களை சலனமின்றி ஊடகங்கள் சுட்டன
தாய்நிலத்தையும் கொலை செய்ய தரகு வேலை செய்வீர்களா
கையூட்டு வாங்கிய கயவர்களே கரும் புகையும் இங்கே வந்து சுவாசிப்பீர்களா??

உலோகமும் கேட்ட ஊழல் அரசுக்கு ஏனோ

எங்கள் உள்ளக் குமுறள்கள் மட்டும் கேட்கவில்லை
நீட்டை அனுமதித்த சுகாதாரத்துறைக்கு ஏனோ
எங்கள் சுகாதாரத்தின் மீது கவலையில்லை!

உப்பு விளைத்த உள்ளங்கள் நிவாரணமும் கேட்க்குமா

ஊறு விளைத்த உங்களை இனிமேலும் மறக்குமா??


உலகிலேயே சுத்தமான ஓர் இடம் என்றால் அது தாயின் கருவறை தான்..
அந்த கருவறையிலே கருவானது கரும் புகையால் கொல்லப்பட வேண்டுமா?
நீங்கள் நலமாக வாழ அந்த இளம் பிஞ்சுகளின் சுவாசத்தையா கேட்பது??
மக்களுக்காகத்தான் திட்டமே தவிர திட்டத்துக்காக மக்கள் என்றைக்குமே இல்லை!!



Comments

Popular Posts